Abstract:
இன்றைய தகவல் யுகத்தில் பொதுநூலகங்களின் தேவைப்பாடு மற்றும் அவற்றின் சேவைகள் என்பன முக்கியமானவையாகும். பிரதேச அமைவுகளுக்கு ஏற்ப நூல கங்களின் விருத்தியும் சேவையின் வளர்ச்சியும் வேறுபட்டு வருகின்றன. பொது நூலகங்கள் கிராமிய சமூகத்தில் எந்தளவிற்கு வினைத்திறனாக செய்யபடுகின்றன. என்பதை மதிப்பாய்வு செய்வது இவ்வாய்வின் நோக்கமாகும். வவுனியா மாவட்டத்தில், 425 வாசகர்களளைக்கொண்ட எட்டுக் கிராமப்புற நூலகங்ளில் இருந்து 100 வாசகர்கள் அடுக்கமைவு மாதிரி (Stratified Sampling) முறையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு விபரணரீதியாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. வினாக்கொத்து, கலந்துரையாடல், ஆவணப் பதிவேடுகள் போன்ற ஆய்வுக் கருவிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. MS Excel முறையினூடாக சதவீதமுறை, தரவிடும் அளவுகோல் போன்ற அளவீட்டு முறைகளைப் பயன்படுத்தி அட்டவணைகள், வரைபுகள், வரைபடங்கள் போன்றவற்றின் மூலம் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்படி கிராமப்புறங்களில் பொதுநூ லகங்களின் சேவைகள் குறைவாகவே காணப்படுகின்றன. சேவைகளின் திருப்தியற்ற நிலைக்கு பொருத்தமற்ற மற்றும் பற்றாக்குறையான ஆளணி நியமனங்கள் பிரதான காரணமாக இவ்வாய்வின ; மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. நூலகர் தரத்துடன் நியமனம் பெற்றவர்கள் 50 வீதத்தினர் (n=4) ஆகும். போதிய நிதி ஒதுக்கீடு இன்மை, வாசகர்களை இலக்காகக் கொண்ட தகவல் வள சேகரிப்பின்மை, இலத்திரனியல் வளங்களுக்கு முன்னுரிமைப்படுத்தப்படாமை, வாசகர்களுக்கு அவசியமான சமுதாய தகவல் சேவையை வழங்காமை போன்றவை சவாலாக் காணப்படுகின்றன. உள்ளூராட்சி சபை நிர்வாகிகள் மத்தியில் கிராமப்புறத்தில் பொது நூலகங்களின் முக்கியத்துவம் பற்றி தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்